RAMAPURAM CAMPUS

Parivendhar Students Tamil Mandram

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம், இராமாபுரம் வளாகத்தில் அறிவியல் மற்றும் மானுடவியல் புலம், பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம் சார்பாக 18.01.2017 – 20.01.2017 ஆகிய நாட்களில் பாட்டு, நடனம், நாடகம், மௌன நாடகப் போட்டிகள் நடைபெற்றன. அப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா 09.02.2017 அன்று டி.ஆர்.பி(TRP HALL) கூடத்தில் இனிதே நடந்தேறியது.

இவ்விழாவில் செல்வி. சு.வள்ளி (பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்) அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

அவரைத் தொடர்ந்து தமிழ்ப்பேராயச் செயலர் முனைவர் கரு. நாகராசன் அவர்கள் இன்று தமிழ்மொழி வாழவும் வளரவும், தமிழ்ப்பேராயம் எவ்வகையில் தம் பங்கினையாற்றி வருகிறது என்பதை மாணவர்கள் விளக்கியுரைத்தார். மேலும் பரிசுப் பெற்றவர்களையும் விழாக் குழுவினரையும் வாழ்த்திப் பேசி, பரிசுப் பெற்ற மாணவர்களுக்குப் பரிசினை வழங்கினார்

அவரைத் தொடர்ந்து தமிழ்ப்பேராயத்தின் தலைவரும் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் இணைத்துணைவேந்தர் முனைவர் தி.பொ. கணேசன் ஐயா அவர்கள் தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களைவிட உலகத்தமிழர்களே அதிகளவில் தமிழை வாழவைப்பதாகவும் இதுபோன்று நாம் பலப் போட்டிகளை நடத்தி தமிழார்வலர்களை ஊக்கப்படுத்த வேண்டுமெனக் கூறிப்பரிசுப் பெற்றவர்களையும் விழாக் குழுவினரையும் வாழ்த்திப் பேசி, பரிசுப் பெற்ற மாணவர்களுக்குப் பரிசினை வழங்கினார்.

அவரைத் தொடர்ந்து இராமாபுரம் மற்றும் திருச்சி வளாக இயக்குநர் முனைவர் முனைவர் டி.எஸ். ஸ்ரீதர் அவர்கள் பரிசுப் பெற்ற மாணவர்களுக்குப் பரிசினை வழங்கி, போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களையும் விழாக் குழுவினரையும் பாராட்டி பேசினார்.

அப்போது மேடையில் இராமாபுர வளாக பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் புலம் இயக்குநர்  முனைவர் வெ. சுப்பையா பாரதி அவர்களும் இராமாபுர வளாக அறிவியல் மற்றும் மானுடவியல்புலம் இயக்குநர் முனைவர் அ. சுப்பிரமணியம் அவர்களும் இராபுர வளாக பாரிவேந்தர் தமிழ்மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஹெலன் ப. கவிதா அவர்களும் இராமாபுர வளாக அறிவியல் மற்றும் மானுடவியல்புலம் துணைமுதல்வர்கள் முனைவர் தீலிபன் மற்றும் முனைவர் சுந்தர் அவர்களும் இருந்தனர்.

இறுதியாக செல்வி.ச. சங்கீகதா (பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்) அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்ச்சியினை தமிழ்மாணவர் மன்ற செயலாளர் மாணவி வே. அகிலா  மற்றும் செல்வன் ச. வாசுதேவன் அவர்களும் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் அறிவியல் மற்றும் மானுடவியல் புலத்தின் துணைமுதல்வர் முனைவர் திலிபன் அவர்களும் மற்றும் தமிழ்த்துறை பேராசிரியர்கள் பேரா. கோ.கணேஷ், பேரா. வ. ஜெயபார்வதி ஆகியோர் ஒருங்கிணைத்து சிறப்பானமுறையில் நிகழ்ச்சிகள் நடைபெற துணைநின்றனர்.

Gallery